அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் தமிழ் மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா

அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் தமிழ் மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா
X
தாராபுரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் தமிழ் மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா
தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பில் பரிசளிப்பு விழா கல்லூரி கருத்தரங்க கூடத்தில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் புஷ்பலதா தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மு.புவனேஸ்வரி கலந்து கொண்டு இலக்கியத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் ப.ரமேஷ் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் ரா.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையை வழங்கினார். தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் மு.ஜோதி மற்றும் விரிவுரையாளர் ரா.ஜெபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். மாணவர் பூபதி நன்றி கூறினார். விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக, இக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டன. விழாவில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ்த்துறை மற்றும் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story