மார்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிர்ப்பு

X

பல்லடம் மார்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிர்ப்பு
பல்லடம் நகராட்சி தினசரி மார்க்கெட்டில் இடிக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்து வந்த வணிகர்களுக்கு முன்வைப்புதொகை வழங்காமல் பல்லடம் நகராட்சி கால தாமதம் செய்து வருகிது. மேலும் 2 மாத வாடகை மட் டுமே செலுத்தாத கடைகளை நகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது. எனவே மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொரோனா கால 5 மாத வாடகை தொகையை வியாபாரிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், முன் வைப்புத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
Next Story