சரக்கு வேன் மோதி முதியவர் பலி

X
மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டி மேலகளம் கிராமத்தை சேர்ந்தவர் யாகப்பன் (வயது 73). சம்பவத்தன்று. இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆண்டவர் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை திருச் சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

