ரெயிலில் அடிபட்டு ஆண் பலி

X
திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தக வல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தேவ தானம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டரான பொன்னர் (வயது 47) என்பதும், அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் அடிபட்டு இறந் தாரா? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து பொன்னரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப் பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொன்னரின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

