காங்கேயத்தில் பசியை போக்குவோம் அமைப்பினர் ஆதரவற்று இறந்த முதியவரை நல்லடக்கம் செய்தனர்

காங்கேயத்தில் பசியை போக்குவோம் அமைப்பினர் ஆதரவற்று இறந்த முதியவரை நல்லடக்கம் செய்தனர்
X
காங்கேயம் பசியை போக்குவோம் அமைப்பினர் ஆதரவற்று இறக்கும் முதியோர்களை நல் அடக்கம் செய்தனர்
காங்கேயத்தில் பசியை போக்குவோம் என்ற தன்னார்வமைப்பு இளைஞர்களால் செயல்பட்டு வருகின்றது. இதில் இயலாதவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் வயது முதிர்வின் காரணமாக உள்ளவர்களை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களை பாதுகாக்கும் பணியும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆதரவற்று வயது முதிர்வின் காரணமாக இறக்கும் முதியவர்களை காவல்துறையின் வேண்டுகோளுக்கிணங்க நல்லடக்கம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கேயம் பசியை போக்குவோம்  அறக்கட்டளை பராமரிப்பில் இருந்த வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருத்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.  காங்கேயம் காவல் நிலையம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காங்கேயம் பசியை போக்கும் தன்னார்வு அமைப்பு சார்பில் வெங்கடேஷ் ஆம்புலன்ஸ் மூலம் உடலை வாங்கி நல்லடக்கம் செய்வதற்காக காங்கேயம் கொண்டு வந்தார். வீரப்பனின் நல்லடக்கமானது காங்கேயம் மையானத்தில் நடைபெற்றது.இதில் அன்பழகன்,ஜாகிர், கோபி,தீபக், சிவக்குமார்,செல்வா,வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லடக்க செலவினை முழுமையாக ஊத்துக்குளி A.P.K செந்தில் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
Next Story