சிறையில் இருக்கும் கணவரை மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு

சிறையில் இருக்கும் கணவரை மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு
X
சிறையில் இருக்கும் கணவரை மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மீது புகார் அளித்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தந்த மனைவியே கணவரை மீண்டும் விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த. பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இன்பக்குமார் இவருக்கு ஏற்கனவே ஆஷா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 பிள்ளைகள் இருந்தனர்.இதனை மறைத்து கடாம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 1 வருடமாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.அதன். பின்னர் இந்த உன்னை இரண்டாவது மனைவிக்கு தெரிய வந்துள்ளது.அதன் பின்னர் இவர் முதல் மனைவி உடனே வாழ்ந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது மனைவி சந்தியா ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இன்பகுமார் மீது போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தற்போது முதல் மனைவிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவி ஒரு பெண் குழந்தை என 2 பேரும் ஆதரவின்றி வறுமையில் தவித்து வருவதாகவும்,அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய இரண்டுவது மனைவி சந்தியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Next Story