ஆம்பூர் அருகே திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் மீது வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் மீது வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருப்பதியிற்கு பாதையாத்திரை சென்ற இரண்டு பெண்கள் மீது மோதிய சரக்கு வாகனம், ஒருபெண் உயிரிழிப்பு, மற்றொரு பெண் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதியிற்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற புஷ்பா, லட்சுமி ஆகிய இரண்டு பெண்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் புஷ்பா என்பவர் உயிரிழப்பு, லட்சுமி படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Next Story