ஆற்காட்டில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

X
வாலாஜாபேட்டை ஜீவன்லைப் கேர் மருத்துவமனை மற்றும் ஆற்காடு மகாலட்சுமி செவிலியர் கல்லூரி இணைந்து உலக காசநோய் தினத்தையொட்டி காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆற்காடு பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மருத்துவமனை இயக்குநர் அர்ஜூனன் தலைமை வகித்தார். நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், வி.ஐ.டி. இணை பேராசிரியர் மோகனபிரியா, செலியர் கல்லூரி தாளாளர் பாலாஜி லோகநாதன், கல்லூரி முதல்வர் சிவசக்தி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் காசநோய் பாதிப்பு, நோய்பரவும் முறை, தடுப்பது குறித்து விளக்கப்பட்டது.
Next Story

