இலவச கண் சிகிச்சை முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

இலவச கண் சிகிச்சை முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
X
தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் என்டிபிஎல் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒருங்கிணைத்த முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் என்டிபிஎல் நிறுவன பொது மேலாளர் அன்பு வாலசுப்ரமணியன், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பாலாஜி நாயக், சங்கர் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story