சேலத்தில் அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநாடு

X
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் தபால்காரர் பிரிவின் 45-வது கோட்ட மாநாடு தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. தபால்காரர் முருகேசன் வரவேற்றார். முன்னாள் கோட்ட செயலாளர் செல்வம் சங்கத்தின் 2 ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் உதவி பொருளாளர் லோகநாதன் வரவு, செலவு அறிக்கையை வாசித்தார். இந்த மாநாட்டில் மேற்கு மண்டல உதவி செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்க தலைவராக நவீன்குமார், செயலாளராக ஜெயந்தன், பொருளாளராக கோமதி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story

