பொது வழி பாதையை மீட்டு தர கோரி ஆட்சியரிடம் மனு

ஆட்சியர் அலுவலகத்தில் பொது வழி பாதையை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மனு..
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எர்ரன அள்ளி ஊராட்சி பனைக்குளம் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது வழி பாதையை மீட்டு தர வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரன அள்ளி ஊராட்சியில் பனைக்குளம் புல எண். 41/ 2A1A1 பட்டா எண்.1076 பி டபிள்யு டி - பொது வழி பாதையை ஆக்ரமித்து வரி பாதி விடாமல் அராஜகம் செய்து வரும் கிருஷ்ணன் என்ற தனி நபர் மீது நடவடிக்கை எடுத்து வழிப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Next Story