வீடு வீடாக ஆய்வு செய்த ஆட்சியர்

வீடு வீடாக ஆய்வு செய்த ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ராசிபுரம் நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 1189 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் நேற்று ராசிபுரத்தில் ஆய்வை முடித்த நிலையில் இன்று திருச்செங்கோட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சுமார் 252 வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக திருச்செங்கோடு நகராட்சி 25-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது வேட்டப்பாறை என்னும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, கேஸ் புக் உள்ளீட்டு இவைகளை ஆய்வு மேற்கொண்டு வீட்டில் எத்தனை பேர் இருந்து வருகிறீர்கள்? எவ்வளவு நாட்களாக குடியிருந்து வருகிறீர்கள் என நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். பல வீடுகளில் மக்கள் இல்லாமல் வீடு பூட்டியும் குடியிருக்கும் அடையாளம் இல்லாமல் இருந்ததால் கடுமையாக கோபப்பட்ட மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டீர்களா? இல்லையா? பெரும்பாலும் வீடுகளில் மக்கள் குடி இல்லாமல் வேறு முகவரியில் குடியிருந்து வருகின்றனர் இந்த முகவரியில் இல்லாதவர்களுக்கு எப்படி பட்டா வழங்க முடியும் இதை ஏன் நீங்கள் இவ்வளவு கவனம் இல்லாமல் செயல்பட்டு வருகிறீர்கள் என கடுமையாக கோபப்பட்டார் அப்பொழுது அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர் வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாரா இல்லையா என வட்டாட்சியரிடம் கேட்டார் உங்கள் அனைவரையுமே சஸ்பெண்ட் தான் செய்ய வேண்டும் முறையான பதில் எதுவும் வழங்கப்படவில்லை கலெக்டர் என்றால் காரில் வந்து இறங்கி ரோட்டில் நின்று பார்த்துவிட்டு செல்வேன் என்று நினைத்தீர்களா என அதிகாரிகளை விலாசி எடுத்தார் நாளையும் வருவேன் வீடுகளில் யாரும் இல்லை என்றால் பட்டா வழங்க மாட்டேன் என கடுமையாக எச்சரித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மக்களையும் அதிகாரிகளையும் கலங்க செய்தது. மாவட்ட ஆட்சித் தலைவரின் திடீர் ஆய்வு மற்றும் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்ற அதிகாரிகள் மீது கோபப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஆய்வின்போது 25வது வார்டு நகர மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள், நகராட்சி பொறியாளர் சரவணன், திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, உள்ளிட்ட நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறையினர் என பலரும் உடன் இருந்தனர்.ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் உமா கூறியதாவது மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாத நிலங்களில் வசித்து வருபவர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் வரைமுறைப்படுத்த ஒரு முறை திட்டமாக இந்த பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது ஐந்து ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக ரேஷன் கார்டு வீட்டு வரி ரசீது தண்ணீர் வரி கட்டிய ரசீதுகேஸ் சிலிண்டர் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதனை வைத்து இவர்கள் குடியிருந்ததை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டு அவர்கள் நேரில் ஆய்வு செய்வார்கள் அதற்குப் பிறகு சிறப்பு குழு ஒன்று இதனை ஆய்வு செய்யும் இது தவறுகள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையாகும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1189 குடியிருப்புகளை அடையாளம் கண்டு அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் ராசிபுரம் நகராட்சிகள் ஆய்வுகள் முடிந்துள்ளது திருச்செங்கோடு நகராட்சிகள் என்று ஆய்வு நடக்கிறது நாமக்கல் மாநகராட்சிகளும் ஆய்வுகள் செய்யப்பட உள்ளது நகர்பொருத்தில் வாழும் மக்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என அடையாளம் காண முயற்சியாக இந்த ஆய்வு நடக்கிறது திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 252 வீடுகள் அடையாளம் காணப்பட்டு மேலாய்வு செய்யப்பட்டு வருகிறது 25 வது வார்டு பகுதியில் ஆய்வு நடந்துள்ளதுகண்டறியப்பட்டுள்ள 1189 வீடுகளின் மதிப்பு 5 கோடிக்குள்இருந்தால் மாவட்ட அளவிலேயே பட்டா வழங்க முடிவெடுக்கப்படும் அதற்கு மேல் இருந்தால் மாநில குழு கூடி முடிவெடுக்கும்என தெரிவித்தார்.
Next Story