விக்கிரவாண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

X
விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சங்கர், பள்ளி மேலாண்மைக் குழு தேன்மொழி, நகாய் ரகுராமன், முன்னாள் மாணவர் சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story

