விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது ---

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து  விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது ---
X
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது -
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ம ஜெயசீலன் அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4129 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து, விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடம் பெற்றுள்ளது. அதன்படி, முதலிடத்திற்கான விருதினை பெற்ற இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி அவர்களும், இரண்டாமிடத்திற்கான விருதினை பெற்ற கன்னிச்சேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
Next Story