ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு

சுடுகாட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம், ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் சுடுகாட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி , ஆட்சியரிடம் மனு சிக்கல் அருகே அருந்ததியர் குடியிருப்பு பகுதி சுடுகாட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுத்து அதனை மீட்டுத்தரக்கோரி அப்பகுதி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடு பட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள சிறைகுளம், கிராமத்தையொட்டி அருந்ததியினர் கிழக்கு குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை ஏர்வாடியை சேர்ந்த நில புரோக்கர் முருக செல்வம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு மீட்டுத்தரக்கோரியும், சுடுகாட்டை ஆக்கிரமித்த நில புரோக்கர் முருக செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அருந்ததியர் காலணி மக்கள் இன்று ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story