மாவட்ட சுகாதாரம் குறித்த திறன் ஆய்வுக்கூட்டம்

X

ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகா தாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவமனை மகப் பேறு சிகிச்சைப் பிரிவு அடிப்படை வசதிகள், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து கேட்டறித்து, தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற் கொள்ள மருத்துவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், திட்ட செயல்பாடுகள், திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த கலெக்டர், மருத்துவமனைகளில் அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், அடிப்படை மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளதை கண்காணித்திடவும் சுகாதாரத்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். இதில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story