திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
உதகை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.பாலடா, இத்தலார், பிக்கட்டி - எடக்காடு, மஞ்சூர் பகுதிகளில், தெருமுனை பிரச்சார கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் இ.எல்.பரமசிவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிகளில் கழக நிர்வாகிகள் - கழக செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story




