குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா அனைவரையும் கவர்ந்து வருகிறது

X
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுள் குன்னுார் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுத் தோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப் பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ள நிலையில் சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டுவருகிறது. அதில் பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும் இந்நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜர வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நீர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது பசுமைக்குடியில் வளர்க்கப்படும் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய பூங்கா நிர்வாகம் முடிவெடுத்துள்ளனர் , இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய பூங்கா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த பச்சை ரோஜாவை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்ப்பட்டது. நாளடைவில் அதன்வளர்ச்சி தடைப்பட்டது தற்போது வெளியில்இருந்து பச்சை ரோஜா செடிகொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சிவெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் காலநிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுகளை பூங்கா முழவதிலும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story

