ராமநாதபுரம் தமிழக இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை தொடங்கியது
ராமேஸ்வரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கையை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல்வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர் ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது இதனின் ராமேஸ்வரம் மீனவர்கள் முயற்சியால் ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா. சகாயம். ஆல்வின். ஜஸ்டின். ஜெர்மனி யஸ். ஆகியோர் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை விமான மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர் ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை மறுநாள் புதன்கிழமை அன்று வா வுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சினைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்
Next Story




