அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி

X

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி.. எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் போலீசார்..
ஆன்லைன் டிரேடிங், ஆன்லைனில் சம்பாதிக்கலாம், வேலை தருவதாக மோசடி, குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி உள்ளிட்ட பல்வேறு வகையில் தற்போது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எளிதில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இளைஞர்களும் இவ்வாறான மோசடிகளில் சிக்கி ஏமாற்றம் அடைகின்றனர். இது போன்ற மோசடி புகார்கள் தினம் தோறும் நூற்றுக்கணக்கில் ஆன்லைன் மூலம் பதிவாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ளும்போது இந்த மோசடிகளில் பெரும்பாலும் வட மாநிலத்தவர்களின் ஈடுபாடு அதிகரித்து உள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வட மாநிலம் சென்று குற்றவாளிகளை கைது செய்கின்றனர். அவ்வாறு மோசடி சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்த செய்யும் போது அவை அனைத்தும் மற்றொரு நபரின் வங்கி கணக்காக இருப்பது தெரியவந்தது. இவ்வாறு அப்பாவி மக்கள் அவ்வப்போது பணத்திற்காக வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை பகிர்வதனால் இவ்வாறான மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க யாருக்கும் வங்கி கணக்குகள் சிம்கார்டுகள் பெற முகவரி உள்ள ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story