கோவை: சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் !

கோவை: சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் !
X
ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களையும், சவுக்கு சங்கர் குடிகாரர்களைப் போல் சித்தரித்திருப்பதற்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்.
துப்புரவு பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் youtuber சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்கள் பற்றி பேசியது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களை அதிர்ச்சிர்க்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தூய்மை பணியாளர்களை குடிகாரர்களைப் போல் சித்தரித்து பேசிய சவுக்கு சங்கரை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் தூய்மை பணியாளர்களாக உள்ள அருந்ததியர்களுக்காகத்தான் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இறந்து போனவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் மூலம் வந்திருந்த ராணுவ படையினர் கூட மறுத்துவிட்ட நிலையில் இங்கிருக்கின்ற தூய்மை பணியாளர்கள் தான் அந்த உடல்களை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார். அந்த சம்பவத்தை கலைஞர் கண்டித்ததையும் குறிப்பிட்டார்.
Next Story