நடந்து வந்த மூதாட்டி மயங்கி விழுந்து இறப்பு

X

குமாரபாளையத்தில் நடந்து வந்த மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜா விநாயகர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் அத்தாயி, 85. இவர் மார்ச். 19, மாலை 05:00 மணியளவில் குமாரபாளையம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற போது, மயங்கி விழுந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில் இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story