பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

X

திருக்கோவிலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருகோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள, 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story