தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது
இந்தி திணிப்பு- நிதி பகிர்வு பாரபட்சம் - தொகுதி மறு சீரமைப்பில் அநீதி ஒன்றிய அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP தலைமையில் நடைபெற்றது.தருமபுரி முன்னாள் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA முன்னிலை வகித்தார்.தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் MGS வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்தி ,முத்தமிழ் ,அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர் பி செந்தில்குமார் , மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி ,மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ,ரேணுகாதேவி , தலைமை செயற்குழு உறுப்பினர் எம் ஜி சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ் ,துரைசாமி ஒன்றிய செயலாளர்: ஏ எஸ் சண்முகம், கேபி மல்லமுத்து, வைகுந்தம்,LD காவேரி, ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், எ கருணாநிதி, வீரமணி, நகர செயலாளர் நாட்டான் எம் மாது, பேரூர் கழகச் செயலாளர்கள் வீரமணி ,சண்முகம் , வழக்கறிஞர் தாஸ், ஒன்றிய ,நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.
Next Story