தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம்

தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம்
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை, காப்புக்காடு தொல்காப்பியர் சிலை வளாகத்தில் வைத்து தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்  தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. அறக்கட்டளை உறுப்பினர் பேபி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். செயலாளர்சஜீவ் அனைவரையும் வரவேற்றார்.        நிகழ்ச்சியில் தமிழ்ச் செம்மல் லாசர், வழக்கறிஞர் புனித தேவ குமார், புதுக்கடை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் மோகன குமார், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சிந்து குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். காப்புக்காடு, புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி செல்வி நிபிதா 'பெண்ணின் பெருமை' குறித்து பேசினார். அவரைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார்.        கூட்டத்தில் தொல்காப்பியர் பிறந்த  நாளை  விமரிசையாகக் கொண்டாடுவது எனவும், வழக்கம் போல் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரைப் போட்டியினை அன்றைய தினம் காலை நடத்துவது எனவும் தொல்காப்பியர் அறக்கட்டளை விருதுக்கான இருவரை அடையாளம் காண்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது  பொருளாளர் ரெவிந்திரன் நன்றி கூறினார்.
Next Story