கீழப்பாவூரில் அமலை செடிகளை அகற்ற கோரிக்கை

கீழப்பாவூரில் அமலை செடிகளை அகற்ற கோரிக்கை
X
அமலை செடிகளை அகற்ற கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மிகப்பெரிய குளங்கள் ஒன்று கீழப்பாவூர் குளமாகும். இக்குளத்திற்கு மேலப்பாவூர் குளத்தில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய் அமலை செடிகளால் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் விவசாயத்திற்கு செல்லக்கூடிய கால்வாய்கள் முற்றிலும் அமல செடிகள் ஆக்கிரமிப்பு செய்து அடைப்புகள் ஏற்பட்டது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அந்த கால்வாயில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. எனவே தற்போது அங்கு அமலை செடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் கீழப்பாவூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story