திருச்செங்கோட்டில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்

X

திருச்செங்கோட்டில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கணக்கெடுப்பு நடத்த உகந்த சூழ்நிலை இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட, அன்புமணி ராமதாஸுக்கு மகுடம் சூட்ட சித்திரை முழு நிலவு மாநாடு நடக்க உள்ளது நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் இருந்து 5000 குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல் வரும் மே 11ம் தேதி நடக்க உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பாக திருச்செங்கோட்டில் நடந்த நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் மற்றும் மாநாட்டு நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தங்க அய்யாசாமி பேட்டி* பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோடுநாமக்கல் ரோடு நாடார் திருமண மண்டபத்தில்நடந்தது வரும் மே மாதம் பதினோராம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் டி என் சுதாகர் தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் மூர்த்தி,முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சிஆர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில்லாமல் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நமது பலத்தை காண்பிக்க நடைபெறும் இந்த மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்கள்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில வன்னியர் சங்கச் செயலாளர் தங்க அய்யாசாமிகூறியதாவது வரும் மே 11ஆம் தேதிசித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது அதற்காக மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற வருகின்றன அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் கூடி மாநாட்டிற்கு குறைந்தபட்சம் 5,000 குடும்பங்களை அழைத்து வர வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது சோர் விளம்பரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது மாநாட்டின் நோக்கம் கடந்த 50 ஆண்டுகளாக ராமதாஸ் வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்கள் வாழ்வை மேம்படுத்தும் வகையில் ஆறு இட ஒதுக்கீடுகளை போராடி பெற்று தந்துள்ளார் அந்த வகையில் 50 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் மத்தியில் இரண்டு சதவீத இட ஒதுக்கீடும் வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார் அதனை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளது 50 ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்தார் இன்றைய கால சூழ்நிலையில் இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் சூழ்நிலை இருந்தும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தட்டிக் கழிக்கும் திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளது என கூறினார்.நிகழ்ச்சியில் பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராமசாமி மாவட்ட துணை தலைவர்கள் சமுத்திரம் கந்தசாமி சிவராமன் சுப்பிரமணி கோடீஸ்வரன் மாவட்ட அமைப்பு தலைவர் ஆவின் செந்தில், மாவட்ட மகளிர் அணி தலைவர் சுதா நடேசன், பொருளாளர் சுமதி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில் பழனியப்பன் நடேசன் திருச்செங்கோடு நகர செயலாளர் சுரேஷ் மற்றும் விமல், அருண்,கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பசுமைத்தாயகம் அமைப்பினர் வன்னியர் சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story