சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற கோரிக்கை

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற கோரிக்கை
X
சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் - சுரண்டை சாலையில் குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதில் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படும் இச்சாலையில் கிடக்கும் இக்குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குலசேகரபட்டி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story