கூடலூர் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
கூடலூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைத்து தருவதில்லை என நகர மன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு..... நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் திமுக நகர மன்ற தலைவி பர்மிளா தலைமையில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைத்து தருவதில்லை. மேலும் இது தொடர்பாக நகரமன்ற நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலக பணியாளர்களை கண்டித்து நகர மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்பட்டது.
Next Story




