பரமத்தி வேலூரில் பாமக ஆலோசனை கூட்டம்.

X

அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள பாமக மாநாடு குறித்த பரமத்தி வேலூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், மார்ச்.26: அடுத்த மாதம் மே 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள பாமக மாநாட்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்தி வேலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தங்கினார். மாவட்ட தலைவர் பாண்டியன், நாமக்கல் மாவட்டம் வன்னியர் சங்க தலைவர் சித்தார்தன்,செயலாளர் வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, நாமக்கல் மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர் தாங்க அய்யாசாமி,ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானம்: மகாபலிபுரம் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு நாமக்கல் மத்திய மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனத்தில் மாநாட்டுக்கு செல்வது என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மே 11 மகாபலிபுரம் மாநாட்டிற்கு நாமக்கல் மத்திய மாவட்டத்தில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. கிராமம் தோறும் எப்படி சுவர் விளம்பரம் பதாகை மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து மாணவர்களுக்கு அனைவரையும் அழைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களிடமும் அழைப்பிதழ் கொடுத்து மாநாட்டிற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது கேட்டுக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பரமத்தி வேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். நாமக்கல் மத்திய மாவட்டம் புதுச்சத்திரம் பைபாஸில் உள்ள நிழற்குலம் அருகே இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சோலார் வசதி ஏற்படுத்த வேண்டும். புதுச்சத்திரம் ஒன்றியம் கண்ணூர்பட்டியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேலாக மேட்டுக்காடு பகுதியில் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெரு விளக்கு அமைத்து தரவேண்டும் என பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story