ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மரில் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தூத்துக்குடியில் உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மரில் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகர துணை மின் நிலையம் அமைந்துள்ளது. நகர் பகுதிக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் எங்கிருந்து மின்வாற்றிகள் வழியாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடத்திற்குள் மின்வாரிய ஊழியர்கள் தவிர வேறு யாரும் செல்ல அனுமதி கிடையாது. இன்று இரவு சுமார் 35 வது பதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டார். இதனால் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தூத்துக்குடி வடபகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டது. அவர் யார் என்பது குறித்து வடபகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் வினோத் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட எனவும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாநகரில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.
Next Story