தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

X
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் l தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில், நாலூர் ஊராட்சியில், இயங்காமல் இருந்த சந்தை மற்றும் கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்த பகுதியினுடைய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கள் மூலம் பல்வேறு கடைகளாக தொழிலை செய்யக்கூடிய இடங்களாகவும், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை விற்கக்கூடிய இடங்களாக மாற்றி இந்த சந்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் திறந்த வெளியில் சந்தை என்பது இல்லை. இந்த சந்தையினை பொருட்களை வாங்கக்கூடிய, பல்வேறு பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக மாற்றினால் நிச்சயமாக லாபம் தரக்கூடிய இடமாக மாறும். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள்; குழுவாக சேர்ந்து, செயல்படுவதன் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரு செயலை தனியாக செயல்படுத்துவது கடினம். அதுவே ஒரு குழுவாக சேர்ந்த செயல்படும் பொழுதுதான் வலிமை பெறுகிறது. குறிப்பாக குழுவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களுக்கான முழுமையான விடுதலை, சுதந்திரம், வலிமை என்பது அவர்களுக்கான பொருளாதாரம் தான். பெண்களுக்கான பொருளாதாரா வலிமை எப்போது நிறைவடைகிறது என்றால் கையில் பணம் இருக்கும் பொழுது, நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கும் போது, நல்ல தொழிலை செய்து வியாபாரத்தில் இலாபம் சம்பாதிக்கும் பொழுது, அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் பெறும் பொழுதுதான் பொருளாதாரம் வலிமையாகும். அந்த வகையில் பெண்களுக்கான பொருளாதார வலிமையை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெற்று, பொறுமையுடனும் தொடர்ச்சியான செயல்பாடுகளுடனும் இருந்தால் நிச்சயமாக கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் மிகப்பெரிய பொருளாதார வலிமையை அடைய முடியும். பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பெண்கள் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை சுய உதவி குழுக்கள் கடன்களை பெற்று சரியான முறையில் சுய தொழில்களை செய்து வருமானம் ஈட்டக்கூடிய தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமுதாயத்தில் உருவாகி வருகின்றனர். எனவே இது போன்ற அரசினுடைய திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் கடனுதவிகளை பெற்று முறையாக செயல்படுத்தி பெண்கள் தங்களுக்கான பொருளாதார வலிமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். இந்த பகுதியில் சந்தையை பயன்படுத்தி இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்குள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக ஆக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story

