குமரி: வணிகர் சங்க பேரவை பொதுக்குழு

X
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் பொன் ஆசை தம்பி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில அமைபாளர் டேவிட்சன், துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சென்னை படப்பை பகுதியில் நடக்கிற மாநில மாநாட்டுக்கு குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லவும், குமரியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்தி முடிக்கவும், குழித்துறை கிழக்கு ரயில் நிலையத்தை பயணிகளின் வசதிக்காக மார்த்தாண்ட ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் களியக்காவிளை வர்த்தக சங்க தலைவர் அலி உசேன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

