காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
உதகைக்கு வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழக முதலமைச்சர் வருகை புரிய உள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் அதிநவீன உயர்தர சிகிச்சைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிலையில் எதிர் வரும் 5ம் தேதி உதகைக்கு தமிழக முதலமைச்சர் வருகை புரிய உள்ள நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதகையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உதகை நுழைவு வாயில் பகுதியான லவ்டேல் ஜங்ஷன், சேரிங்கிராஸ், ஏடிசி , மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story



