சேலம் மத்திய சிறையில்

X
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 900-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முற்றிலும் எழுத படிக்க தெரியாத 300 கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் மூலம் பாடப்புத்தகங்கள் வழங்கி 6 மாதங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து சிறையில் நேற்று 300 கைதிகளும் எழுத்தறிவு தேர்வு எழுதினர். மாநில வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன், மாநில முதன்மை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யழகன், சேலம் மாவட்ட கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வானா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி திட்ட அலுவலர் மாரியப்பன் ஆகியோர் இந்த தேர்வை நடத்தினர். அதேசமயம், சிறை கண்காணிப்பாளர் வினோத், துணை சிறை அலுவலர் குமார், நல அலுவலர் அன்பழகன் மற்றும் சிறை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

