கிள்ளுக்கோட்டை அருகே கார் பைக் மீது மோதி விபத்து

X
குளத்தூர் அருகே உள்ள அண்டகுளம், காணக்கம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (32), அவரது மனைவி பிரியா (30) ஆகிய இருவரும் அண்டகுளத்திலிருந்து காணக்கம்பட்டிக்கு பைக்கில் சென்றனர். அப்போது காணக்கம்பட்டி சாலையில் காரில் வந்த சிரஞ்சீவி (20) என்பவர் மோதியதில் ரமேஷுக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் உடையாளிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
Next Story

