ராமநாதபுரம் தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு

நேற்று இருநாட்டு மீனவர்கள் நட்பு ரீதியான சந்திப்பு நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பரபரப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் ஜெர்சீஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அந்த விசைப்படகையும் அதிலிருந்த பாக்கியம், சுதன், களஞ்சியம், பிரிட்டோ, ரஞ்சித், பாலா,யோவான், அந்தோணி சிசோரியன் உள்ளிட்ட 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படு ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே நட்பு ரீதியாக நேற்று வவுனியா அருந்ததி தனியார் மஹாலில் இலங்கை மீனவர்கள் 12 பேர் கொண்ட குழுவுடன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சேர்ந்த ஐந்து மீனவர்கள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பில் முதல் கட்டமாக ஒரு மாத காலம் இழுவை மடி மீன்பிடிப்பை நிறுத்த வேண்டும் என இலங்கை மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற இந்திய மீனவர்கள், இது குறித்து விரைவில் பரிசீலனை செய்வது இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவதற்கு இருநாட்டு அரசாங்கத்திடம் பரிந்துரைப்பதாகவிம், மீனவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்ததாக நேற்று வவுனியாவில் கூட்டாக மீனவர்கள் பேட்டி அளித்தனர். இந்நிலையில் இன்று 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Next Story