நேரம் மாற்றம்

X

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தூய்மை பணியாளர்கள் வேலை நேரம் மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள் பல தரப்பு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் மாநகராட்சி தூய்மை பணிகள் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் வெயில் காரணமாக தூய்மை பணியாளர்களுக்கு மதிய நேரம் பணி ரத்து செய்யப்பட்டு பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு ஷிப்ட், மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு ஷிப்ட் என மாற்றப்பட்டுள்ளது.இதேபோல் குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. நண்பகல் முதல் மாலை வரை பணிகள் இருக்காது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வெயில் தாக்கம் குறையும் வரை மதிய நேர பணி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. தாக்கம் குறைந்தபின் வழக்கம்போல் பணி நடக்கும். வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினை போக்க மாநகராட்சியில் பணியாற்றும் 2000 தூய்மை பணியாளர்களுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்பட உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story