மத்திய அரசு மீது மதுரை எம்.பி குற்றச்சாட்டு

வானிலை அறிக்கையை இந்தி மொழியில் அளித்து வருவதாக மதுரை எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு வானிலை அறிக்கையை இந்தி மொழியில் அளித்து வருவதாக மதுரை எம்.பி தனது அறிக்கையை மூலம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story