இலையூரில் சமுதாய வளைகாப்பு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்திய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ

இலையூரில் சமுதாய வளைகாப்பு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்திய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ
X
இலையூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் கர்ப்பிணி எங்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் சீர்வரிசை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அரியலூர், மார்ச்,27 - இலையூரில் கர்பிணி தாய்மார்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கினார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாரத்தில், தமிழக முதல்வர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில், எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு கலந்து 200-க்கும் ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து,சீர்வரிசை வழங்கி வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர்உசேன் திமுக ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், ரெங்க.முருகன், மணிமாறன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் டி எம்டிஅறிவழகன், சேகர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டனர்.முடிவில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ( கூ.பொ) காயத்திரி நன்றி தெரிவித்தார்..
Next Story