வாசுதேவநல்லூரில் விளைச்சலும் இல்லை போதிய விலையும் இல்லை - கோரிக்கை

வாசுதேவநல்லூரில் விளைச்சலும் இல்லை போதிய விலையும் இல்லை - கோரிக்கை
X
விளைச்சலும் இல்லை போதிய விலையும் இல்லை - கோரிக்கை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிவகிரி வாசுதேவநல்லூர் தென்மலை ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிர் செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிப் போய் விட்டன. மீண்டும் வெயிலடித்தபோது அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நெல் விளைச்சலும் இல்லைபோதிய விலையும் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு நெல்லுகளுக்கு விலை நிவாரணம் வழங்க வேண்டும் என வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story