மண் எடுக்க வந்த வாகனங்கள் சிறை

மண் எடுக்க வந்த வாகனங்கள் சிறை
X
கொல்லங்கோடு
கொல்லங்கோடு நகராட்சி 30-ம்  வார்டுக்கு உட்பட்ட ஏலாக்கரை என்ற பகுதி உள்ளது. இது மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கி,  போக்குவரத்து தடை  படுவது வழக்கம். எனவே தண்ணீர் தேங்காமல், சாலையின் மட்டத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துடன் கோரிக்கை விடுத்தனர்.         இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஏலாக்கரை பகுதியில் உள்ள சாலையில்  மழை நீர் தேங்காத வகையில் மண் போட்டு சீரமைக்கும் பணியை தொடங்கியது. ஆனால் தற்போது சாலையை அமைக்க அதிக அளவில் மண் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே மண் எடுத்த தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் இருந்து மண்ணெடுக்க தாசில்தாரிடம் அனுமதி வாங்கியது.        சாலை பணிக்கான ஒப்பந்ததாரர் மண்ணெடுக்க முயன்றார். இதை கண்ட பொதுமக்கள் அங்கு மண் எடுத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என  எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாகனங்களை திடீரென சிறைபடித்தனர்.      தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து மண்ணெடுக்க வந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி, பின்னர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மண் எடுக்க தடை செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story