ஜெயங்கொண்டம் அருகே முன்னாள் அதிமுக வார்டு கவுன்சிலர் தற்கொலை

X
அரியலூர், மார்ச்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள சின்னவளையம் தெற்குதெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (80)முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர் சற்றே மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இவருக்கு சகுந்தலா, அழகுராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர், முதல் மனைவி சவுந்தலாவிற்கு ராஜராஜன், இளையராஜா என இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி அழகுராணிக்கு ராமச்சந்திரன் நீலகண்டன் என இரண்டு மகன்களும், ராஜலட்சுமி என ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் இவர் இன்று தனது ஓட்டு வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியின் மகன் ராஜராஜன் தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் தெரிவித்துள்ளார்.இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கோவிந்தசாமியின் உடலை பிரேத மீட்டு பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தபோது உறவினர்கள் திடீரென உடலை கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து அவரது முதல் மனைவி மகன் ராஜராஜன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளார் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர். இதனால் சின்னவளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

