பதப்பதைக்க வைக்கும் காட்சி

ஊட்டி கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை துரத்திய ஒற்றை யானை
பதப்பதைக்க வைக்கும் காட்சி ஊட்டி கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை துரத்திய ஒற்றை யானை நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து முதுமலை செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதையானது 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, மான், கரடிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியில் காலம் என்பதால் தண்ணீர் தேடி அருகில் உள்ள மலைப்பாதைக்குக் காட்டு யானைகள், கரடிகள் வருவது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த மலைப்பாதையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வருவதாகவும், மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் காரில் உதகை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த காட்டு யானை ஒன்று அவர்களைக் கண்டதும் துரத்தத் தொடங்கியுள்ளது. அதனால், அச்சமடைந்த அவர்கள் யானையிடம் இருந்து தப்பிக்க வேகமாக காரை திருப்பி, மீண்டும் வந்த மசினகுடி வழியே சென்றுள்ளனர். இதனை காருக்கு அமர்ந்திருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, யானை துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story