ராணிப்பேட்டையில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் ஒருவர் பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் தகரகுப்பம் ஊராட்சி ஒட்டனேரியை சேர்ந்த வெல்டர் ராஜி 40 என்பவர் இன்று தனது வீட்டில் தலையில் காயத்துடன் மயங்கியநிலையில் கிடந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

