சி.முட்லூர்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சி.முட்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் சரகம் சி-முட்லூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கார் மாணவர்களிடையே வரப்போகின்ற கோடை மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளில் சென்று ஆழம் தெரியாமல், உதவிக்கு ஆள் எவரும் இல்லாமல் குளிப்பது தவறு என்றும், கடல், ஆறு மற்றும் குளம் ஆகிய பகுதிகளில் கவனமாக பெற்றோர்களின் துணையுடன் செல்ல வேண்டும் என்றும் செல்போனில் விளையாடுதல் கூடாது என்றும் நீண்ட நேரம் அதில் செலவழிக்க கூடாது என்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி படிக்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story