தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி

என்கவுண்டர் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி பூந்தமல்லி அருகே பேட்டி
என்கவுண்டர் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி பூந்தமல்லி அருகே பேட்டி புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .இதில் மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழி கொள்கையை புரட்சி பாரதம் முழுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் : தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த கட்சியாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்களாக தான் இருப்பார்கள் புரட்சி பாரதம் கட்சியின் நிலையும் மும்மொழி கொள்கை எதிர்த்துதான் நிற்போம், இரு மொழிக் கொள்கைதான் ஏற்போம், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் ஐந்து தொகுதிக்கு குறைவில்லாமல் கேட்போம், இந்த முறை பூந்தமல்லி தொகுதியை புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கேட்போம், தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போட வேண்டும், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி போனால் கூட்டணி என்று தற்போது சொல்லவில்லை பழனிச்சாமி வந்து பார்த்ததால் கூட்டணி அமைக்கலாம் என்று அவர்களுக்கு எண்ணம் இருக்கலாம் இன்னும் பழனிச்சாமி சொல்லவில்லை அவர் சொன்ன பிறகு எங்களது கருத்தை நாங்கள் சொல்வோம், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை பயப்படுகிறார்கள் என்கவுண்டர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் என பேசினார்.
Next Story