நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு : கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவிப்பு

X

நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு 1 லட்ச ரூபாய் வரை செலவு செய்தும் கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவிப்பு
திருவள்ளூர் நகரில் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு 1 லட்ச ரூபாய் வரை செலவு செய்தும் கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவிப்பு. திருவள்ளூர் நகராட்சியில் ஒரு நாய்க்கு 1650 ரூபாய் வீதம் 1,01300 செலவு செய்து இதுவரை 614 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து 5 நாட்கள் பராமரிக்கப்பட்டு மீண்டும் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்பட்டுள்ளது இருப்பினும் திருவள்ளூர் நகர் முழுவதும் குறிப்பாக நகராட்சி அலுவலகம் மார்க்கெட் பகுதி ஆட்சியரகம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் குழந்தைகள் முதியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
Next Story