விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் : விவசாயிகள் கைது பரபரப்பு

தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு NH 205 தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனத்தில் இருந்து நகரி nh716 பி ரயில் பாதை திட்டங்களுக்காக நிலம், வீடு, கடைகள்,மரங்கள், ஆகியவற்றைகளை இழந்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆகியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இழப்பீட்டிற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும் பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் செய்வதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே நடத்தப்பட்டதால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர், இதனை அடுத்து நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் இதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லையா எனக் கூறி காவல் துறையிடம் விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் விவசாய சங்கத்தினரை, கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது விவசாய சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு பெரும் பரபரப்பான காணப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story