முந்திரி பயிரில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்த தவறினால் மகசூல் ஏற்பட வாய்ப்பு

X
அரியலூர், மார்ச் 27- முந்திரி பயிரில், கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றாமல் தவறினால் தேயிலை கொசுவால் அதிக மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோட்டக்கலை பயிரான முந்திரி பயிர், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் 3,0437 எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலையால் முந்திரி பயிரில் தேயிலை கொசு அதிகமாக தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுபடுத்த தவறினால் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிவப்பு}கருப்பு கலந்த நிறுத்தில் இருக்கும் இந்த தேயிலை கொசுவானது, இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாக்கும் பருவங்களில் தாக்கும். இதன் குஞ்சுகள் சிவப்பு எறும்பு போல் இருக்கும். தாய் பூச்சிகள் சுமார் 60}80 முட்டைகளை சதைப்பற்றான புதிதாக துளிர்விடும் தண்டுப்பகுதியில் இடும் முட்டையிலிருந்து 5}7 நாள்கள் இளம் பூச்சிகள் வெளிவரும்.தேயிலைக கொசு, புதுத் துளிர்கள் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சி கருகச் செய்துவிடும். இதன் தாக்குதலால் 20}90 சதம் மகசூல் இழப்பு ஏற்படும். இப்பூச்சி வேப்ப மரத்தில் வாழ்வதால் வேப்பிலைக் கொசு என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மழைக்கு பிறகு அடர்வான பணிபொழிவு, வானம் மேக மூட்டம் கூடிய சூழலில் இப்பூச்சி அதிகமாக பெருகி ஒரு வாரத்திற்குள்ளாக தோப்பில் பெருவாரியாக மரங்களை தாக்கி சேதப்படுத்துவதால் இப்பூச்சியை "சூரைப்பூச்சி" என்றும் "கொல்லிப்பூச்சி" என்றும் அழைக்கின்றனர். தேயிலை கொசு முந்திரி, வேம்பை தவிர கொய்யா, நாவல், முருங்கை போன்ற மரங்களையும் தாக்கும். இவை 10}12 நாள்களில் 4 முறை தோல் உதிர்த்து முழு வளர்ச்சி பெற்ற பூச்சிகளாகின்றன. இயற்கை முறை: முந்திரி தோட்டங்களை எப்பொழுதும் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோயுற்ற மற்றும் பாதிப்பிற்கு உண்டான பகுதிகளை உடனடியாக வெட்டி அகற்றிட வேண்டும். முசிடு என்னும் சிவப்பு எறும்புகள் இப்பூச்சியினை செம்மையாக கட்டுப்படுத்த கூடியவை. எனவே முந்திரி தோப்பில் சிவப்பு எறும்புகளை பாதுகாக்க வேண்டும். பஞ்சகாவ்யா (3மூ) 30 மி.லி, 1 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் காய்பிடிக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். பியோவெரியா பாசின்னா என்ற பூஞ்சையை 10 கிராம்,1 லிட்டஎன்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 0.5மூ உடன் டீப்பால் ஒட்டும் திரவம் 1மி.லி, 1 லிட்டர் தண்ணீருக்கு அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.ரசாயண முறை: முதல் தெளிப்பு... டிசம்பர்} ஐனவரி மாதங்களில் முந்திரி தளிர்விடும் தருணத்தில் இமிடாகடளோபிரிட் 17.8மூ எஸ்எல் என்ற பூச்சி கொல்லியை 0.7 மிலி ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஏக்கரக்கு 140 மிலி மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து இலைகளில் நன்கு ஒட்டுவதற்கு ஒரு லிட்டர் மருந்து கலவைக்கு 1 கிராம் காதி சோப்பு கலந்து தெளிப்பது அவசியம். இரண்டாம் தெளிப்பு.... ஜனவரி}பிப்ரவளில் முந்திரி பூக்கும் பருவத்தில் தயாமிதோக்சம் 25மூ றுபு என்ற பூச்சிகொல்லியை 0.4 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஏக்கருக்கு 80 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் உதிர்வதை தடுக்க 2ஆவது மருந்து தெளிப்பின் போது ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு 2 கிராம் அளவில் யூரியா பயன்படுத்தலாம். மோனோ அம்மோனியம் பாஸ்பேட் 1மூ (10 கிராம் ஃலிட்டர் தண்ணீர்) + போரான் (1 கிராம் ஃலிட்டர் தண்ணீர்) கரைசலை தெளிக்க வேண்டும். மூன்றாம் தெளிப்பு... பிப்ரவரி}மார்ச் மாதங்களில் முந்திரி பிஞ்சு விடும் பருவத்தில் லாம்டா சைமோலோத்ரின் 5மூ இசி 0.6 மி.லி,லிட்டர் தண்ணீர் அல்லது ஏக்கருக்கு 120 மிலி (600 மி.லி, 1000 லிட்டர் தண்ணீர்) மற்றும் ஒட்டுபசை (0.5 மி.லி லிட்டர் தண்ணீர்) கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யா (3மூ) 30 மிலி, 1லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் கலந்து காய் பிடிக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இப்பூச்சிகளின் தாக்குதலை செம்மையாக கட்டுப்படுத்த முந்திரி தோட்டத்தில் உள்ள வேப்ப மரங்கள் மற்றும் ஊடுபயிர்கள் மீதும் மருந்தை தெளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story

